ETV Bharat / state

வெள்ளிநீர் வீழ்ச்சி அருகே காட்டுத் தீ

திண்டுக்கல்: கொடைக்கானல் வெள்ளி நீர் வீழ்ச்சி அருகே ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்பு துறையினர் தீவிரம் காட்டிவருகின்றனர்.

Kodai
author img

By

Published : Apr 2, 2019, 8:31 AM IST

திண்டுகல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் அதிக வெப்பம் நிலவிவருகின்றது. இதனால் மரங்கள், புதர்கள், புற்கள் கருகி நிலையில் உள்ளன.

இதன் காரணமாக தனியார் பட்டா இடங்களிலும் வனப்பகுதிகளிலும் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டு வருகின்றது. பல இடங்களில் புகை மண்டலம் ஏற்பட்டு வருவதுடன் புற்கள் கருகியதால் அவை காற்றில் பறந்து வருகின்றன. இதனால் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே நேற்றும் பகல் நேரத்தில் வெள்ளிநீர் வீழ்ச்சி அருகே உள்ள பட்டா நிலங்களில் உள்ள புதர்களில் தீ விபத்து ஏற்பட்டு காற்றின் வேகத்தில் மளமளவென தீ பரவியது. அந்தப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது.

இதனையடுத்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து சுமார் இரண்டு மணி நேரம் போராடி அருகில் உள்ள வனப்பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு தீயை பரவ விடாமல் அணைத்தனர்.

வனப்பகுதிகள் மற்றும் தனியார் நிலங்களில் ஏற்படும் தீயிணை கட்டுப்படுத்த வனத் துறையினர் போதிய நடவடிக்கைகள் எடுக்க முன்வர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கூறிவருகின்றனர்.

தற்போது நிலவிவரும் கடும் வெப்பம் காரணமாக தீ விபத்துகள் அதிகரிக்கும் என்பதால் வனத் துறையினர் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது .

காட்டு தீ

திண்டுக்கல் 

கொடைக்கானல் வெள்ளிநீர் வீழ்ச்சி அருகே உள்ள பட்டாநிலங்களில் காட்டு தீ, தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்புதுறையினர் தீவிரம்.

கொடைக்கானல் பகுதியில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் அதிக வெப்பம் நிலவி வருகின்றது. இதனால் மரங்கள், புதர்கள், புற்கள் கருகி நிலையில் உள்ளன. 

இதன் காரணமாக தனியார் பட்டா இடங்களிலும் வனப்பகுதிகளிலும் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டு வருகின்றது. இதனால் பல இடங்களில் புகை மண்டலம் ஏற்பட்டு வருவதுடன் புற்கள் கருகியதால் அவை காற்றில் பறந்து வருகின்றன. இதனால் பொது மக்கள் மற்றும்  வாகன ஓட்டுனர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே இன்றும் பகல் நேரத்தில் வெள்ளிநீர் வீழ்ச்சி அருகே உள்ள பட்டாநிலங்களில் உள்ள புதர்களில் தீ விபத்து ஏற்பட்டு காற்றின் வேகத்தில் மளமளவென தீ பரவியது. அத்துடன் அந்தப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது,  
இதனை அடுத்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி அருகில் உள்ள வனப்பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு பரவவிடாமல் தீயிணை அணைத்தனர். வனப் பகுதிகள் மற்றும் தனியார் நிலங்களில் ஏற்படும் தீயிணை கட்டுப்படுத்த வனத்துறையினர் போதிய நடவடிக்கைகள் எடுக்க முன்வர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கூறி வரும் நிலையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக  தீவிபத்துகள் அதிகரிக்கும் என்பதால் வனத்துறையினர் கூடுதல் பணியாளர்களை நியமித்து தீயணைப்பு துறையினருக்கு கூடுதல் வாகனத்துடன் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது .
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.