தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.
இதில் நகர் மற்றும் ஊரக பகுதிகளில் வாரச்சந்தை இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் எட்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த வாரச்சந்தை வரும் வாரம் ஞாயிற்றுக்கிழமை (அக.11) முதல் அரசு நடைமுறைகளை பின்பற்றி திறக்கப்படும் என நகராட்சி ஆணையர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுமக்கள், வியாபாரிகள் ஆகியோர் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வாரச்சந்தைக்கு வர வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: குப்பைகள் மண்டிக்கிடக்கும் வார சந்தை - கடை போட ஆர்வம் காட்டாத வியாபாரிகள்