ETV Bharat / state

திண்டுக்கல்லில் த‌லை விரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு...! - Dindigul Mountain Villages

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துக் கொண்டே செல்வதால் மலை கிராமமக்கள் ப‌ள்ளத்தாக்கிற்கு நடந்து சென்று தண்ணீர் சேகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ப‌ள்ளத்தாக்கிற்கு நடந்து சென்று தண்ணீர் சேகரிக்கும் மக்களின் அவல நிலை

author img

By

Published : May 27, 2020, 11:12 PM IST

கோடை காலம் தொடங்கியுள்ளதால், திண்டுக்கல் பகுதியில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட துவங்கியுள்ளது. இதன் ஆரம்பமாக திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌லில் மேல் ம‌லை கிராம‌மான‌ புதுபுத்தூரில் த‌ண்ணீர் தட்டுப்ப்பாடு நிலவி வருகிறது. சுமார் 500க்கும் மேற்ப‌ட்ட‌ குடும்ப‌ங்க‌ள் வாழும் இக்கிராம‌த்தில் பிர‌தான‌ தொழிலாக விவ‌சாய‌ம் இருந்து வ‌ருகிற‌து.

பள்ளதாகில் தண்ணீர் எடுக்கும் காட்சி
பள்ளதாகில் தண்ணீர் எடுக்கும் காட்சி
இப்பகுதி மக்கள் வ‌ழ‌க்க‌மாக‌ த‌ண்ணீர் எடுப்ப‌த‌ற்கு கிண‌ற்றை ம‌ட்டும் ந‌ம்பி வாழ்ந்துவந்தனர். ஆனால் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் புதுபுத்தூர் கிராம கிண‌றுக‌ள் வ‌ர‌ண்டு போகியுள்ள‌து. இதனால் ஒரு குட‌ம் த‌ண்ணீருக்கு ப‌ல‌ கிலோ மீட்ட‌ர் ந‌ட‌ந்து சென்று ம‌லை ச‌ரிவில் உள்ள சிறிய ஊற்றில் தண்ணீர் சேகரித்து வருகின்றனர். மேலும் த‌ண்ணீர் வ‌ந்தாலும், ஒரு குட‌ம் நிற‌ம்பிவ‌த‌ற்கு 3 ம‌ணி நேர‌ம் வ‌ரை ஆகியுள்ள‌தால், த‌ண்ணீர் த‌ட்டுப்பாடு த‌லை விரித்து ஆடுகின்ற‌து.
இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் மலைச்சரிவில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு தண்ணீர் சேகரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏற்கனவே கரோனாவால் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், த‌ற்போது ம‌லை கிராம‌ ம‌க்க‌ளுக்கு த‌ண்ணீர் தட்டுப்பாடு த‌லை வ‌லியாக‌ மாறியுள்ள‌து. எனவே அர‌சு சிறப்பு க‌வ‌ன‌ம் செலுத்தி த‌ங்க‌ள் கிராமத்திற்கு தண்ணீர் வழங்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ள‌ன‌ர்.

இதையும் படிங்க: குடிநீர் வழங்க மறுக்கும் திமுக ஊராட்சித் தலைவர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.