ETV Bharat / state

‘தண்ணீர் இல்லாமல் நாங்கள் எப்படி வாழ்வது?’ - கிராம மக்களின் சோகக் கதை! - தண்ணீர் தட்டுப்பாடு

திண்டுக்கல்: நந்தனார் கிராம மக்கள் ஐந்து நாட்களுக்கு ஒருமுறை வரும் குழாய் நீரை சேமித்து வாழ வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. அம்மக்களின் வலிகள் நிறைந்த வார்த்தைகளுடன் தங்களது வாழ்க்கையை கடந்து செல்கின்றனர்.

நந்தனார் கிராம மக்கள்
author img

By

Published : May 4, 2019, 10:36 PM IST

தமிழ்நாடு முழுவதும் நிலவி வரும் தண்ணீர் பஞ்சத்தால் மக்களின் நிலை மிக மோசமாகி வருகிறது. பருவகால மழையும் பொய்த்து போனதால் பூமியும் வெப்பமடைந்து வருகிறது. எங்கு பார்த்தாலும் காய்ந்து போன நிலம், வறட்சியும், வறுமையும் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. நமது குழந்தைகள் பாலுக்காக ஏங்கிய காலம் மறுவி இன்று தண்ணீருக்காக அழும் நிலை வந்துவிட்டது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் நந்தனார் கிராம மக்கள் தண்ணீருக்காக காத்திருக்கும் அவல நிலை பலரையும் அதிர்ச்சியைடைய வைத்துள்ளது.

பாரதிராஜா படமான கருத்தம்மா படத்தில் காண்பிக்கப்படுவது போல் வறண்ட பூமியாக காட்சியளிக்கும் மாவட்டம் திண்டுக்கல். இம்மாவட்டத்தில், தற்போது கடுமையான வறட்சி நிலவி வருகிறது. அதிலும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள நந்தனார்புரம் கிராமத்தில் நிலவும் தொடர் தண்ணீர் தட்டுப்பாட்டால் இங்குள்ள மக்கள் ஐந்து நாட்களுக்கு ஒருமுறை வரும் குழாய் நீரை சேமித்து வாழ வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், வேலைக்கு செல்ல வேண்டிய, ஆண் - பெண்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இங்கு வாழும் மக்கள் தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் அளவிற்கு பணக்காரர்கள் இல்லை, ஏழ்மையில் வாழும் எளிமையான மக்களாவர். இது கோடை காலம் என்பதால் குடிப்பதற்கு கூட தண்ணீரின்றி தவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

நந்தனார் கிராம மக்கள்

மேலும், தண்ணீர் வரும் நாட்களில் மணிக்கணக்கில் காத்திருந்து மண்டையை பிளக்கும் உச்சி வெயிலில் நின்று சிறியவர், பெரியவர் என அனைவருமாக தண்ணீர் பிடிக்கும் அவல நிலையை காணுகையில் கண்களில் ரத்தக்கண்ணீரே வருகிறது. இதுகுறித்து பேசிய அப்பகுதி மக்கள், 'நான்கு நாட்களுக்கு ஐந்து நாட்கள் ஒருமுறை தண்ணீர் வந்தால் எப்படி நாங்கள் வாழ்வது. குடிப்பது, சமைப்பது மட்டுமின்றி குளிப்பதற்கு, துவைப்பதற்கு என அனைத்திற்கும் நாங்கள் இந்த தண்ணீரை நம்பிதான் உள்ளோம். தண்ணீர் தட்டுப்பாட்டினால் கோடைகாலங்களில் குழந்தைகளைக் குளிக்க வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.

Intro:திண்டுக்கல் 3.5.19

பிரியங்கா

நீரின்றி அமையாது உலகு என்பது நம் வாழ்வில் நீரின் தேவை எவ்வளவு இன்றியமையாதது என்பதை எடுத்துரைக்கிறது. மனிதர்களாகிய நாம் அனைவரும் வாழ்வதற்கு நீர் என்பது அத்தியாவசிய தேவையாக உள்ளது. நம் அன்றாட வாழ்வில் அனைத்து நிகழ்வுகளிலும் நீரின் தேவை நிறைந்திருக்கிறது. ஆனால் மழையின்றி வறட்சியின் காரணமாக கோடை காலங்களில் தண்ணீர் குடங்கள் குறை குடங்களாகவே கூத்தாடி வருகின்றன. மக்கள் குடிப்பதற்கு கூட நீர் இன்றி பல இடங்களில் தவிக்கின்றனர். முக்கியமாக கிராமப்பகுதிகளில் குடிக்கும் நீரை எடுப்பதற்காக பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று நீர் எடுத்து வருகின்றனர்.

Body:தமிழகம் முழுவதும் நிலவிவரும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில்
அடிப்படையிலேயே வறண்ட பூமியான திண்டுக்கல்லில் நிலவும் தண்ணீர் தட்டுப்பட்டால் இங்குள்ள மக்கள் நான்கு நாட்கள், ஐந்து நாட்களுக்கு ஒருமுறை வரும் நீரை நம்பியே நாட்களை நகர்த்துகின்றனர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள கிராம்ம நந்தனார்புரம். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பம் வசித்து வருகிறது. இங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளிகள், சிலர் விவசாயிகள். மழையின்றி போனதால் பலரும் மாற்று வேலைகளுக்கு செல்கின்றனர். தொடர்ந்துவரும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக நந்தனார்புரம் கிராம மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கோடை காலம் என்பதால் தண்ணீரின் தேவை அதிகமாக உள்ளது. அதிலும் பள்ளிகள் விடுமுறை காலம் என்பதால் குழந்தைகள் வீட்டில் உள்ள நேரத்தில் தண்ணீர் தேவை அதிகமாக இருக்கும். முக்கியமாக குடிப்பதற்கு தண்ணீர் இன்றி தவிக்கும் அவல நிலை இங்குள்ளது.

நகர்ப்புற மக்கள் தங்களின் தேவைக்காக பணம் அளித்து குடிநீர் வாங்கிக் கொள்கின்றனர். ஆனால் கிராமப்புற மக்கள் நான்கு நாட்களுக்கு ஒருமுறை வரும் நீரை நம்பியே உள்ளனர். தங்களின் அன்றாட வாழ்விற்குத் தேவையான வருமானமே இல்லாத நிலையில் தண்ணீருக்காக செலவழிக்க தங்களிடம் எப்படி பணம் இருக்கும் என்று கேட்கின்றனர்.

மேலும், தண்ணீர் இன்றி வீட்டில் எந்த வேலையும் நடைபெறாது என்பதால் தண்ணீர் வரும் நாட்களில் மணிக்கணக்கில் வெயிலில் நின்று சிறியவர், பெரியவர் என அனைவருமாக தண்ணீர் பிடிக்கின்றனர். வீட்டில் உள்ள டிரம் மற்றும் தொட்டிகளில் நீரை சேமித்து வைத்து மறுமுறை தண்ணீர் வரும் வரை சேமித்த தண்ணீரை சிறுகசிறுக செலவழித்துக் கொள்கின்றனர்.

தண்ணீர் தட்டுப்பாட்டினால் ஏற்படும் தங்களுக்கு நிகழும் துயரங்கள் குறித்து நம்மிடம் பேசிய அப்பகுதி மக்கள், நான்கு நாட்களுக்கு ஐந்து நாட்கள் ஒருமுறை தண்ணீர் வந்தால் எப்படி நாங்கள் வாழ்வது. குடிப்பது, சமைப்பது மட்டுமின்றி குளிப்பதற்கு, துவைப்பதற்கு என அனைத்திற்கும் நாங்கள் இந்த தண்ணீரை நம்பி உள்ளோம். தண்ணீர் தட்டுப்பாட்டினால் கோடைகாலங்களில் குழந்தைகளை குளிக்க வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

பருவ மழை பொய்த்ததால் நிலவிவரும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கிட அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மக்களின் தேவையாக ஏழுகிறது. ஆனால் அரசின் கீழ் இயங்கி வரும் அறநிலையத்துறை யாகங்கள் நடத்தச் சொல்லி உத்தரவிட்டுள்ளது. மழைநீர் சேமிப்பு, மரம் வளர்ப்பு போன்ற திட்டங்களை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை இது போன்ற சமயங்களில் முன்னெடுத்தால் மக்களிடையே அதிகம் சென்றடையும். அது மட்டுமின்றி அரசு கட்டிடங்கள், கல்லூரிகள் மற்றும் தனியார் வணிக வளாகங்கள் என அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் திட்டத்தை கட்டாயமாக்கினால் கண்டிப்பாக எதிர்காலத்தில் நல்ல பயன் தரும் என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.