ETV Bharat / state

குட்கா, பான் மசாலா விற்கும் நபர்கள் மீது குண்டாஸ் பாயும் என எச்சரிக்கை - etv bharat

குட்கா, பான் மசாலா விற்கும் நபர்கள் மீது குண்டாஸ் பாயும் என திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குட்கா பான்மசாலா விற்கும் நபர்கள் மீது குண்டாஸ்

author img

By

Published : Aug 13, 2021, 9:19 PM IST

திண்டுக்கல்: பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் கோட்டயத்தில் பர்னிச்சர் பொருள்களை இறக்குவதற்காக சேலம் மார்க்கமாக ஒரு கண்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது.

இந்த லாரியை சிவகுமார் என்பவர் ஓட்டி வந்தார். சேலம் வந்தவுடன் அங்கு சிக்கந்தர் ஹாலிக், ரபிக் ஆகியோர் சிவகுமாரிடம் தாங்கள் அதிகமாக பணம் தருகிறோம், கண்டெய்னர் லாரியில் ஆயிரம் கிலோ குட்கா, பான் மசாலா மூட்டைகளை ஏற்றிச் சென்று திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் இறக்கி விடுமாறு தெரிவித்துள்ளனர்.

பணத்தைப் பெற்றுக் கொண்ட சிவகுமார் குட்கா, பான் மசாலா மூட்டைகளை கண்டெய்னர் லாரியில் ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து சிக்கந்தர் ஹாலிக், ரபிக் ஆகியோர் காரில் வந்துள்ளனர்.

திண்டுக்கல் விட்டல் நாயக்கன்பட்டி என்னும் இடத்தில் கண்டெய்னர் வந்து கொண்டிருந்தபோது, காரில் வந்த இருவரும் வத்தலகுண்டு பைபாஸ் அருகே சென்றதாக கூறப்படுகிறது.

குட்கா பான்மசாலா விற்கும் நபர்கள் மீது குண்டாஸ்

இதனிடையே காவல் துறையினருக்கு இதுகுறித்து ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் சிக்கந்தர் ஹாலிக், ரபிக் ஆகியோரை காவல் துறையினர் பிடித்து விசாரணை செய்தனர்.

அப்போது இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளனர். பின்னர் அவர்களின் செல்போனை சோதனை செய்ததில், விட்டல் நாயக்கன்பட்டியில் வழியாக செல்லும் கண்டெய்னரில் குட்கா, பான் மசாலா மூட்டைகள் கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து கண்டெய்னரை காவல் துறையினர் மடக்கி பிடித்தனர்.

அதில் சுமார் 15 லட்சம் மதிப்பிலான ஆயிரம் கிலோ குட்கா, பான் மசாலா மூட்டைகள் இருப்பது உறுதியானது. இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்த காவல் துறையினர் வேடசந்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் லாரி ஓட்டுநர் சிவக்குமார் மற்றும் சிக்கந்தர் ஹாலிக், ரபிக் ஆகியோரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து நேரில் ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாசன் கூறுகையில், "இதுபோன்று குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டாஸ் பாயும்" என்றார்.

இதையும் படிங்க: குண்டாஸ் உத்தரவை ரத்து செய்யக் கோரி 'பப்ஜி' மதன் மனு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.