திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே வட்டக்கானல் பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில் இங்கிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் சாலை வசதியற்ற வெள்ளகெவி மலைக்கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இருக்கும் மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது.
இந்நிலையில், முறையான சாலை வசதி இல்லாததால் இவர்கள் விளைவிக்கக் கூடிய விவசாய பயிர்களைக் கூட குதிரை மூலம் கொண்டு வந்து விற்பனை செய்யும் நிலை உள்ளது. இதனால் இக்கிராமத்திற்கு சாலை வசதி வேண்டும் என பல முறை மக்கள் மனு அளித்துள்ளனர். ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் மருத்துவமனை போன்ற அடிப்படை வசதிகளுக்கு கூட செல்ல முடியாத நிலைமையும் இருப்பதால், மழை நேரங்களில் மிகுந்த சிரமத்திற்குள்ளாவதாகவும், இக்கிராமத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகளும் சாலை வசதியின்றி அவதிகுள்ளாவதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு - சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை.!