திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்த பூசாரிபட்டி நூலகம் அருகே உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் இன்று 10 அடிநீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது. அங்குள்ள நூலகம் அருகே கோழி ஒன்றை அந்த மலைப்பாம்பு விழுங்கிக் கொண்டிருந்தது. இதைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த தங்கப்பாண்டி என்பவர் பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து பாம்பை லாவகமாக பிடித்து சாக்கு மூட்டையில் கட்டிவைத்தனர்.
தொடர்ந்து நத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த அலுவலர்கள், மலைப்பாம்பை நத்தம் வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து மலைப்பாம்பை அருகிலுள்ள கரந்தமலை பகுதியில் கொண்டுசென்று திறந்துவிட்டனர். பிடிப்பட்ட மலைப்பாம்பு சுமார் அடி நீளமும் 40 கிலோ எடையும் கொண்டது என வனத் துறையினர் தெரிவித்தனர்.