கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை நான்காவது முறையாக நீட்டித்துள்ளன. இதில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு டீக்கடைகள், உணவகங்களில் பார்சல் வழங்க மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஹோட்டல்கள், சாலையோர கடைகள், இறைச்சிக் கடைகள் போன்றவை சில திறக்கப்படாத நிலையில், நகர் பகுதிகளிலும் சாலையிலும் சுற்றித் திரியும் தெரு நாய்கள் போதிய உணவு கிடைக்காமல் சுற்றித்திரிகின்றன.
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி பகுதிகளில் தக்காளி வியாபாரம் செய்துவரும் பவுசு என்பவர் இதுபோன்று, உணவின்றி பசியால் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களுக்கு உணவும், தண்ணீரும் வழங்கிவருகிறார்.
இதுகுறித்து பேசிய அவர், “மனைவியுடன் இணைந்து காய்கறி வியாபாரம் செய்துவருகிறேன். வியாபாரத்திற்குச் செல்லும்போது வழியில் உணவின்றி தவித்துவரும் தெருநாய்களுக்கு எங்களது வருமானத்தில் ஒருபகுதியை ஒதுக்கி உணவும் தண்ணீரும் அளித்து வருகிறோம்” என்றார்.
இதையும் படிங்க: டெல்லி குருத்துவாராவிலிருந்து பத்தாயிரம் பேருக்கு உணவு வழங்கல்!