திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வாலிசெட்டியபட்டியைச் சேர்ந்தவர் சடையப்பன்(43). இவர் அருணாச்சலபிரதேச மாநிலத்தில் இராணுவ வீரராக பணியாற்றி வந்தார். 2 தினங்களுக்கு முன்பு சடையப்பன் சீன எல்லையான ஓரக் என்ற இடத்தில் பீரங்கி இயக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
பொதுமக்கள் அஞ்சலி
அப்போது அங்கிருந்த குளிர் மற்றும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவரை சக ராணுவ வீரர்கள் மீட்டு, சிகிச்சைக்காக அங்குள்ள இராணுவ மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சடையப்பன் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடல், விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் இன்று அதிகாலை அவரது சொந்தக் கிராமம் வாலிசெட்டிபட்டிக்கு உடல் கொண்டுவரப்பட்டது. அங்கு பொதுமக்கள் சடையப்பனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
![சடையப்பன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-dgl-02-vedasandur-armyman-deathfuneral-visual-img-scr-tn10053_20102021154012_2010f_1634724612_1064.jpg)
![சடையப்பன் போபர்ஸ் பீரங்கியுடன் இருக்கும் புகைப்படம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-dgl-02-vedasandur-armyman-deathfuneral-visual-img-scr-tn10053_20102021154012_2010f_1634724612_24.jpg)
இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்
இதற்கிடையே, சடையப்பனின் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் விசாகன், மாவட்ட எஸ்.பி. சீனிவாசன், டிஎஸ்பி. மகேஷ் மற்றும் அனைத்து கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.பின்னர் அவரது உடல் 21 குண்டுகள் முழங்க இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
![தேசியக்கொடியை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் இராணுவ அலுவலர்கள்.](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-dgl-02-vedasandur-armyman-deathfuneral-visual-img-scr-tn10053_20102021154012_2010f_1634724612_836.jpg)
![உள்ளிட்டோர் அஞ்சலி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-dgl-02-vedasandur-armyman-deathfuneral-visual-img-scr-tn10053_20102021154012_2010f_1634724612_876.jpg)
இறந்த சடையப்பனுக்கு பழனியம்மாள் (35) என்ற மனைவியும், ஹரிஹரன் (19) என்ற மகனும், பிரியங்கா (17) என்ற மகளும் உள்ளனர்.
இதையும் படிங்க: புகார் விசாரணை செய்ய சிறப்பு காவல் அலுவலரை நியமிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி