ETV Bharat / state

சிறுமி பாலியல் வன்புணர்வு வழக்கு: சிபிசிஐடி விசாரிக்கக்கோரி மனு! - தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம்

திண்டுக்கல்: 12 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடியிடம் ஒப்படைக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

 vadamadurai minor girl death case wants to change cbcid

author img

By

Published : Oct 16, 2020, 3:14 PM IST

திண்டுக்கல் மாவட்டம் ஜி.குரும்பபட்டி கிராமத்தில் 12 வயது சிறுமி கடந்தாண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட கிருபானந்தன் என்பவரை திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் விடுதலை செய்தது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் எனப் பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து தமிழ்நாடு அரசு சார்பாக சென்னைஉயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம், முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த வழக்கை மேல்முறையீடு செய்தமைக்கு அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும், வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி, விரைவுபடுத்த வேண்டும்என்றும் வலியுறுத்தினர்.
மேலும், சிறுமியின் கொலை வழக்கில் மீண்டும் முதலிலிருந்து அனைத்துசாட்சிகளையும் விசாரிக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட மூன்று லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் 25 லட்சமாகஉயர்த்தி வழங்க வேண்டும். சிறுமியின் குடும்பத்தில் ஒரு நபருக்கு அரசு பணி வழங்கவேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.