ETV Bharat / state

பழனியில் கேரள பெண் கூட்டுப்பாலியல் வன்புணர்வு: எஸ்பி விசாரணை

author img

By

Published : Jul 12, 2021, 3:03 PM IST

கேரள பெண்ணை கடத்திச்சென்று பாலியல் வன்புணர்வுசெய்த விவகாரம் தொடர்பாக, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா இன்று (ஜூலை 12) சிலரிடம் நேரில் விசாரணை நடத்திவருகிறார்.

மாவட்ட எஸ்பி
ரவளிபிரியா

திண்டுக்கல்: பழனியில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்த கேரள பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பழனிக்குச் சென்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா இன்று (ஜூலை12) விசாரணை மேற்கொண்டுவருகிறார்.

குற்றம் நடந்ததாகக் கூறப்படும் அடிவாரம் காவல் நிலையத்திற்குள்பட்ட காவல் துறையினர், தங்கும் விடுதி உரிமையாளர், பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

அடுத்தக்கட்டமாக பழனி காவல் துறையினரை கேரளாவிற்கு அனுப்பி, அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட பெண், அவரது கணவரிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

மூன்று குழு அமைத்து விசாரணை

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா, "கேரள பெண் பழனிக்கு வந்தபோது வன்புணர்வு செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் பெயரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடத்தல், கூட்டு பாலியல் வன்புணர்வு ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்குத் தொடர்பாக பெண் காவல் ஆய்வாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு முழு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகள், தொலைபேசி உரையாடல்கள், சாட்சிகள் ஆகியவை குறித்து விசாரணை நடத்த மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனது நேரடி கண்காணிப்பில் இந்தக் குழு செயல்படும்.

அறிவியல் ரீதியான விசாரணை

பெண்கள், குழந்தைகள் தொடர்பான விவகாரங்களில் தமிழ்நாடு காவல் துறை துரிதமாகச் செயல்பட்டுவருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் எதுவும் தெரிவிக்கப்பட்டு, காவல் துறையினர் அலட்சியமாக இருந்ததாகத் தெரியவந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம்.

இந்த வழக்கில் அறிவியல்பூர்வமாகவும், நேர்மையாகவும் விசாரணை மேற்கொண்டுவருகிறோம். இது தொடர்பான வழக்கில் கேரள காவல் துறையினருடன் இணைந்து முழு விசாரணை செய்வோம்" என்றார்.

புனிதத் தலங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பு?

இந்த விவகாரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், "தமிழ்நாட்டின் புனிதத் தலங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதும், பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்த புகாரைக்கூட காவல் துறை வாங்க மறுத்திருப்பதும் தமிழ்நாடு தலைகுனிய வேண்டிய செயல்கள். இதற்கு காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்வீட்
பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட்

இதையும் படிங்க: பழனியில் கேரள பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.