ETV Bharat / state

உடுமலை சங்கர் கொலை வழக்கில் விடுதலையான சின்னசாமி தனிமைப்படுத்தல்! - ஆணவக்கொலை சின்னசாமி

திண்டுக்கல்: உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் விடுதலையான சின்னசாமி, சொந்த ஊரான பழனிக்கு வந்த நிலையில் அங்கு தனிமைப்படுத்தப்பட்டார்.

liberated-chinnasamy-isolated
liberated-chinnasamy-isolated
author img

By

Published : Jun 24, 2020, 10:19 AM IST

உடுமலை சங்கர் கொலை வழக்கில் ஆறு பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையின் மேல்முறையீட்டு வழக்கில், கௌசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்தும், மீதம் உள்ளவர்களுக்கு தூக்கு தண்டனையை ஆயுள்தண்டனையாகக் குறைத்தும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதனையடுத்து கோயம்புத்தூர் சிறையிலிருந்து விடுதலையான சின்னசாமி பலத்த காவல் பாதுகாப்புடன் சொந்த ஊரான பழனிக்கு அதிகாலை கொண்டுவரப்பட்டார்.

வெளிமாவட்டத்திலிருந்து அவர் வந்திருப்பதால் சுகாதாரத் துறையினர் சின்னசாமியை பழனியில் உள்ள பழனியாண்டவர் கலைக்கல்லூரிக்கு அழைத்துச்சென்று கரோனோ பரிசோதனைக்காகத் தனிமைப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் சின்னசாமியின் மனைவி, உறவினர்கள் அவரைச் சந்திக்க காவல் துறையினரிடம் அனுமதி கேட்டனர். அதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட நபர்களை மட்டும் காவல் துறையினர் அனுமதித்தனர்.

இதையும் படிங்க: ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்: பூவை ஜெகன் மூர்த்தி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.