திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகர் பகுதி, தாராபுரம் சாலையில் உள்ள தனியார் விற்பனை அங்காடியில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ஒட்டன்சத்திரம் காவல்துறையிருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
சம்மந்தப்பட்ட விற்பனை அங்காடியை சோதனை செய்ததில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கடையின் உரிமையாளர் பீர்சின்னப்பா (58), அவரது மகன் அக்கிம் (32) ஆகிய இருவரும் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்தது உறுதியானது. அதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் கடையிலிருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்
இதையும் படிங்க: கஞ்சா விற்பனை செய்த நான்கு பேர் கைது!