ETV Bharat / state

பழனி பாதயாத்திரை பக்தர்கள் உயிரிழப்பு - நடந்தது என்ன? - பழனி பாதயாத்திரை பக்தர்கள் இருவர் பலி

மதுரை- திண்டுக்கல் தேசியநெடுஞ்சாலை பள்ளபட்டி அருகே அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பழனி பாதயாத்திரை பக்தர்கள் இருவர் உயிரிழந்தனர்.

திண்டுக்கல்  தேசியநெடுஞ்சாலை
திண்டுக்கல் தேசியநெடுஞ்சாலை
author img

By

Published : Jan 7, 2022, 2:24 PM IST

திண்டுக்கல் மாவட்ட எல்லைப்பகுதியான பள்ளபட்டி காவல் சோதனைச் சாவடியருகே பழனி கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்ற, விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை சேர்ந்த இரு சகோதரர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.

இந்நிலையில் அதிகாலைப்பொழுது என்பதால் சம்பவ இடத்தில் யாரும் இல்லாததால், இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சகோதரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மையநாயக்கனூர் காவல் ஆய்வாளர் சண்முகலெட்சுமி உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், திருச்சுழியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கனிமுருகன் மற்றும் அவரது சகோதரர் முத்துராஜ் ஆகியோர் என்பது தெரியவந்தது.

அதன் பின் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் இரவு நேரங்களில் பக்தர்கள் பாதயாத்திரையாக நடக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை மீறி நடந்ததால் தான் விபத்து ஏற்பட்டுள்ளது.

எனவே காவல்துறையின் அறிவுரைகளை ஏற்க மறுத்து, அதை மீறி பாதயாத்திரை செல்பவர்களால் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறிவருகிறது என்றார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் உடலைக் காப்பாற்றி உடற்கூராய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதிகாலை நேரத்தில் பாதயாத்திரை சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ’ 5 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி தொடங்க நடவடிக்கை’- அமைச்சர் மா. சுப்ரமணியன்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.