ETV Bharat / state

பழனியில் பேருந்து மோதி இருவர் பலி - பேருந்துக்கு தீவைத்த பொதுமக்கள்! - திண்டுக்கல்

திண்டுக்கல்: பழனி அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்த நிலையில், ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேருந்துக்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

public-set-fire-to-the-bus
author img

By

Published : Sep 5, 2019, 10:17 AM IST

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த சிந்தலவாடம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி துர்க்கையப்பன். இவர் தனது மனைவி விஜயலட்சுமி, மாமியார் அங்கம்மாள் ஆகியோருடன் அதே ஊரில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது திண்டுக்கல்லிலிருந்து பழனி நோக்கி அதிவேகமாக சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே துர்க்கையப்பன், அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோர் உயிரிழந்தனர்.

இதில் படுகாயமடைந்த அங்கம்மாள் ஆபத்தான நிலையில் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தால் ஆத்திரமடைந்த சிந்தலவாடம்பட்டி பொதுமக்கள் தனியார் பேருந்துக்கு தீவைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுமக்கள் பேருந்துக்கு தீவைப்பு

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் தலைமையிலான காவல் துறையினர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தனர். இதனால் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Intro:திண்டுக்கல் 05.09.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

பழனி அருகே இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவர் பலி. ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பேருந்து க்கு தீ வைத்ததால் பதற்றம் ஏற்பட்டது.

Body:திண்டுக்கல் 05.09.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

பழனி அருகே இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவர் பலி. ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பேருந்து க்கு தீ வைத்ததால் பதற்றம் ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்து உள்ளது சிந்தலவாடம்பட்டி. இந்த ஊரைச்சேர்ந்த விவசாயி துர்க்கையப்பன். இவர் தனது மனைவி விஜயவட்சுமி மற்றும் மாமியார் அங்கம்மாள் ஆகியோருடன் அதே ஊரில் உள்ள உறவினர் வீட்டு இறப்பு நிகழச்சிக்கு சென்றுவிட்டு இருசக்கரவாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது திண்டுக்கல்லில் இருந்து பழனி நோக்கி அதிவேகமாக சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து சாலையில் சென்றுகொண்டிருந்த துர்க்கையப்பனுடைய இருசக்கர வாகனத்தில் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே துர்க்கையப்பன் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த அங்கம்மாள் ஆபத்தான நிலையில் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிந்தலவாடம்பட்டி பொதுமக்கள் தனியார் பேருந்துக்கு தீவைத்தனர். இதனால் பெரும் பதட்டம் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. சக்திவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். மூன்றுக்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறையினர் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இதனால் சுமார் இரண்டுமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.Conclusion:திண்டுக்கல் 05.09.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

பழனி அருகே இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவர் பலி. ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பேருந்து க்கு தீ வைத்ததால் பதற்றம் ஏற்பட்டது.

இது குறித்த செய்தி
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.