ETV Bharat / state

கோயிலினுள் விஷம் குடித்து இருவர் தற்கொலை! - காவல்துறை விசாரணை

திண்டுக்கல்: நத்தம் அருகேவுள்ள திருமலைக்கேணி கோயிலினுள், விஷமருந்தி இளம்பெண், இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Two commit suicide by drinking poison inside the temple

author img

By

Published : Sep 16, 2020, 5:16 PM IST

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செங்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட திருமலைக்கேணி கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருவது வழக்கம். நேற்று (செப்.15) மாலை ஒரு ஆணுடன் இளம்பெண் கோயிலுக்கு வந்துள்ளார். இந்நிலையில் அவர்கள் இருவரும் கோயிலின் கிரிவலப்பாதையில், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், பெண்ணின் கைப்பையிலிருந்து ஆதார் அட்டை, குடும்ப அட்டையை எடுத்து சோதனை மேற்கொண்டர். அப்போது அப்பெண் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த வித்யா (27) என்பது அவரது கணவர் ஜெய்செந்தில் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனிடையே வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பெண்ணுடன் வந்தவர் அவருடைய கணவரா? அல்லது காதலரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்திவருகின்றனர். கோயிலில் இருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சகோதரிக்காக தாய்மாமனை கொலைசெய்தவருக்கு வலைவீச்சு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.