திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கம்பளிபட்டி கிராமத்தில் மழை வேண்டியும், மக்கள் நோய் நொடி இல்லாமல் வாழவும் காளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். அப்போது, கோயில் முன்புள்ள அரச மரம், வேப்ப மரம் ஆகியவற்றிற்குத் திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில், அரசமரத்தை மணமகனாகவும், வேப்பமரத்தை மணமகளாகவும் பாவித்து வேட்டி, சேலை, மாலை உள்ளிட்டவற்றை அணிவித்து வேதமந்திரம் முழங்க திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. இத்திருமண நிகழச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டு வழிபட்டனர்.
இதையும் படிங்க: