திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே பெய்துவரும் கனமழையால், தாண்டிக்குடி பிரதான சாலையில் சாரல் மழையுடன் கூடிய பலத்த காற்று வீசியதால் ராட்சத மரங்கள் விழுந்தது. இதனால் சுமார் 2 மணிநேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொடைக்கானலில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், ஆங்காங்கே மரங்கள் சாய்வதும் மண் சரிவுகள் ஏற்பட்டும் வருகிறது. இதனிடையே பண்ணைக்காடு-தாண்டிக்குடி செல்லக்கூடிய பிரதான சாலையில் சாரல் மழையுடன் கூடிய பலத்த காற்று வீசியதால் ராட்சத மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்தன.
தொடர்ந்து சம்பவ இடத்தில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் இணைந்து ஜேசிபி உதவியுடன் மரங்களை அகற்றும் பணியில் இன்று (ஆக.6) ஈடுபட்டனர்.
இதனால், அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. மேலும், இதனைத் தொடர்ந்து கொடைக்கானலில் பலத்த காற்று வீசி வருவதால் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: அசராமல் 17 கி.மீ.,க்கு மலையேறி அசத்திய 2 வயது குழந்தை