திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாள்களாகப் புரெவி புயல் காரணமாக பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்துவந்தது. இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்துவந்ததால் கொடைக்கானல் வத்தலகுண்டு, பழனி ஆகிய சாலைகளின் வழியே வாகனங்களில் பயணிக்கத் தடைவிதித்து இருந்த நிலையில் நேற்று (டிச. 04) போக்குவரத்து தொடங்கியது.
மேலும் மலைச் சாலைகளில் ஆங்காங்கே மரங்களும் பாறை கற்களும் சாலையின் குறுக்கே விழுந்துகிடந்தன.
இதனைத் தொடர்ந்து நேற்று (டிச. 04) இரவு பரவலாக பல இடங்களில் கனமழை பெய்ததால் கொடைக்கானல்-பழனி செல்லக் கூடிய பிரதான சாலையான சவரிக்காடு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. மண்சரிவை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மழை நேரங்களில் இதுபோன்று மண் சரிவுகள், பாறைச் சரிவு ஆகியவை ஏற்படுவது இப்பகுதியில் வழக்கமாகிவருகிறது. எனவே சாலையை அகலப்படுத்தி மண்சரிவு போன்றவை ஏற்படாத வண்ணம் தடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மின் ஊழியர்கள் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!