திண்டுக்கல்: கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் இடங்களில் ஒன்றாக புதிதாக திறக்கப்பட்ட ரோஜா பூங்கா உள்ளது. தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ரோஜா பூங்காவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் உள்ளன. தற்போது பனி தாக்கத்தாலும் முறையான பராமரிப்பு இல்லாததாலும் ரோஜா பூங்காவில் மலர்கள் இன்றி காணப்படுகிறது.
சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகள் மலர்கள் இன்றி காய்ந்த செடிகளை கண்டு பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும், முறையான பராமரிப்பு இன்றி இருப்பதால் பனியின் தாக்கத்தின் காரணமாக ரோஜா செடிகள் அனைத்தும் கருகி இருக்கிறது என நுழைவுவாயிலில் தெரிவித்திருந்தால் தங்களது நேரம், ஆற்றும் பணம் விரயம் ஆகாமல் மற்ற இடங்களுக்கு சென்றிருப்போம் என சுற்றுலாப் பயணிகள் தங்களது ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர்.
மேலும் நுழைவுக் கட்டணம் வாங்கி மலர்கள் இன்றி இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும், இப்பகுதியில் சிசிடிவி இல்லாததால் குற்றங்கள் நடைபெறுவதற்கு வசதியாக பூங்கா அமைந்துள்ளது.
பனிப்பொழிவு அதிகமான நேரங்களில் மலர்ச்செடிகளை, பசுமை போர்வைகளை கொண்டு மூடி பனியின் தாக்கத்தால் மலர்ச்செடிகள் பாதிப்படையாமல் பாதுகாத்து பராமரிக்க வேண்டும் எனவும்; இது போன்ற சமயங்களில் நுழைவுக் கட்டணம் குறைத்தால் நன்றாக இருக்கும் எனவும் சுற்றுலாப் பயணிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மச்சு பிச்சு சுற்றுலா தளத்தில் சிக்கிய 417 பேர்.. பெருவில் தொடர் பரபரப்பு!