திண்டுக்கல்: கரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலாதலமான கொடைக்கானலில் சில மாதங்களாக சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் கரோனா பரவல் குறைந்ததை அடுத்து இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை மீண்டும் தொடங்கியுள்ளது.
இருப்பினும், கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக சில இடங்கள் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக பல மாதங்களாக இயக்கப்படாமல் இருக்கும் சுற்றுலா படகுகள் சேதமடைந்துள்ளன.
எனவே, படகுகளை சரிசெய்ய வேண்டும் என்றும், அனைத்து சுற்றுலா இடங்களையும் திறக்க வேண்டும் என அரசிற்கு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பணி நேரத்தில் குதுகல படகு சவாரி- சிக்கிய அலுவலர்கள்!