ETV Bharat / state

போனா வராது பொழுது போனா கிடைக்காது.. ஆடித் தள்ளுபடியில் கொடிகட்டி பறக்கும் தக்காளி விற்பனை!

author img

By

Published : Aug 6, 2023, 3:44 PM IST

திண்டுக்கல்லில் ஆடி தள்ளுபடியாக தக்காளி கிலோ 60வது ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்ற அறிவிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் அதிகாலை முதல் காந்தி காய்கறி மார்க்கெட்டில் குவிந்து வண்ணம் உள்ளனர்.

ஆடித் தள்ளுபடியில் கொடிகட்டி பறக்கும் தக்காளி

Dindigul Tomato Sells in aadi offer

திண்டுக்கல்: ஆடி மாத தள்ளுபடி துணிக்கடை, நகை கடைகளில் மட்டும் அல்ல தக்காளி கடையிலும் தான். திண்டுக்கலில் ஆடித் தள்ளுபடியாக கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்கப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல்லில் பொது மக்களையும், வாடிக்கையாளர்களையும் கவரும் விதமாக ஆடி மாத அதிரடி தள்ளுபடியாக ஒரு கிலோ தக்காளி ரூபாய் 60-க்கு விற்கப்படும் என்ற அறிவிப்பால் தக்காளி வாங்க பொதுமக்கள் குவிந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் நகர் மத்தியில் மாநகராட்சிக்கு சொந்தமான காந்தி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

இந்த மார்க்கெட்டில் உள்ளூர் மற்றும் வெளியூர் (நாட்டு காய்கறிகள், இங்கிலீஷ் காய்கறிகள்) காய்கறிகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுவதால், திண்டுக்கல் நகர் பகுதி மற்றும் புறப்பகுதி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் காய்கறிகளை விற்பனைக்கு வாங்கி செல்வது வழக்கம்.

இந்த காந்தி காய்கறி மார்க்கெட்டில் ஏ.எஸ்.டி என்ற மொத்த தக்காளி வியாபார கடையை சந்தோஷ் என்பவர் 20 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். தற்போது ஆந்திரா, கர்நாடகா, ஓசூரில் இடைவிடாத மழையாலும் மற்றும் தமிழகத்தில் போதிய தக்காளிகள் வரத்து குறைவாலும், கடந்த ஒரு மாத காலமாக தக்காளியின் விலை 120 முதல் 200 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில் கடந்த வாரம் சந்தோஷ் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக 5 டன் தக்காளிகளை 60 ரூபாய்க்கு விற்பனை செய்தார். ஆடி மாதம் என்றாலே மக்களை உற்சாகத்தில் வைத்திருப்பது நகை கடைகள் மற்றும் துணிக்கடைகளின் தள்ளுபடி என்று தான் கேள்விப்பட்டு இருப்போம்.

ஆனால் தற்போது கதை மாறி, வரலாற்றில் இடம் பெறும் வகையில், திண்டுக்கலில் முதல் முறையாக ஆடித் தள்ளுபடியாக தக்காளி ஒரு கிலோ ரூபாய் 60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல் இன்று (ஆகஸ்ட். 5) தக்காளி ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்பனையாகி வரும் நிலையில், 8 டன் தக்காளிகளை மொத்த வியாபாரம் செய்யாமல் ஒரு நபருக்கு இரண்டு கிலோ வீதம், ஆடி மாத தள்ளுபடியாக குறைந்த விலைக்கு தக்காளிகளை விற்பனை செய்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "தக்காளி விலை சராசரியாக 50 ரூபாய்க்கு கீழ் குறைந்து விற்பனையாகும் வரை, ஆடி மாதத்தில் வாரம் ஒரு முறை பொது மக்களுக்காக 60 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம் என்று கூறியுள்ளதால், பொதுமக்களும் வாடிக்கையாளர்களும் காலை 5 மணியில் இருந்து நீண்ட வரிசையில் நின்று தக்காளிகளை வாங்கி செல்கின்றனர்.

தக்காளி விலை சராசரி நிலைக்கு வரும் வரை இந்த விற்பனையானது வாரம் ஒரு முறை விற்கப்படும் என்ற அறிவிப்பால் பொதுமக்களும் வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சியுடன் வரிசையில் நின்று வாங்கிச் செல்கின்றனர்" என்று கூறினார்.

இதையும் படிங்க: அண்ணாமலையார் கோயிலில் குத்துவிளக்கு பூஜை.. 308 பெண்கள் பங்கேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.