தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பரப்புரையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், திண்டுக்கல் தொகுதியின் திமுக வேட்பாளர் வேலுச்சாமியும் இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது, ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோயிலில் வழிபாடு மேற்கொண்ட பின்னர், கொடைக்கானல் நகர் பகுதிகளான மூஞ்சிக்கல், நாயுடுபுரம், கலையரங்கம், பாம்பார்புரம், அப்சர்வேட்டரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் தலைமையில் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது, கஜா புயலின் போது ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அதிமுக அரசின் மீது வேலுச்சாமி குற்றஞ்சாட்டினார்.
திமுக வேட்பாளரின் பரப்புரையால் போக்குவரத்து பாதிப்பு!
திண்டுக்கல்: திமுக வேட்பாளர் வேலுச்சாமி இன்று கொடைக்கானலில் உள்ள பல்வேறு பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது, பல்வேறு இடங்களில் பல மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.