திண்டுக்கல் அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சைமணி(42). இவர் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை செய்து வந்துள்ளார். இவரது மகள் அனுசியா(16) பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், பிச்சைமணி புதிதாய் வாங்கிய இரு சக்கர வாகனத்தில் தனது மகளை ஏற்றிக்கொண்டு சின்னாளப்பட்டியில் உள்ள கோயில் ஒன்றுக்கு சென்றார். அப்போது, கலிங்கபட்டி பிரிவு அருகே பின்னால் வந்த லாரி மோதியதில் இருவரும் தூக்கி எறியப்பட்டனர்.
இந்த விபத்தில் பிச்சைமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகள் அனுஷ்யா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து அம்பாத்துரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் தந்தை, மகள் இறந்ததால் உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.