திண்டுக்கல்: பாவேந்தர் கல்விச்சோலை சார்பில் திருவள்ளுவருக்கு சிலை வைப்பதற்காக 21 ஆண்டுகளுக்கு முன்பு 500 கிலோ வெண்கல சிலை செய்யப்பட்டது. இந்தச் சிலையை நிறுவுவதற்காக, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்திற்கும், மாநகராட்சி நிர்வாகத்திற்கும் தொடர்ந்து சிலை அமைப்புக் குழுவின் சார்பில் தொடர்ந்து மனு கொடுக்கப்பட்டது. ஆனால் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள புனித லூர்து அன்னை மேல்நிலைப் பள்ளியில் வளாகத்தில் பல ஆண்டுகளாக மூடியே இருந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட்.11) அப்பள்ளியின் நுழைவு வாயிலில் திருவள்ளுவரின் சிலை நிறுவப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காவல் துறையினர், பள்ளி நிர்வாகத்திற்கும், சிலை அமைப்பு குழுவினருக்கும் சிலையை அகற்ற வேண்டும் என தொடர்ந்து அலைபேசி மூலமாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் சிலை அமைப்பு குழு தர்ணா போராட்டம் நடத்தியது.
இதனால் சிலை அமைப்பு குழுவினருக்கும், அரசு அலுவலர்களுக்கும் சற்று சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் அரசு அனுமதி இல்லாமல் சிலை வைப்பதற்கு தற்போது அனுமதி இல்லை என்று கூறி அரசு அலுவலர்கள் சிலையை கிரேன் மூலம் அகற்றினர். இந்த சம்பவம் திண்டுக்கல்லில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உலக இளைஞர்கள் தினம் - லட்சம் இளைஞர்கள் இங்கே ஒரு விவேகானந்தர் எங்கே?