ETV Bharat / state

Palani: போகர் ஜெயந்தி விழாவுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி - சிவானந்த புலிப்பாணி வரவேற்பு! - Bogar Jayanti festival

பழனியில் வருகின்ற 18-ஆம் தேதி நடைபெறும் போகர் ஜெயந்தி விழாவிற்கு திருக்கோயில் நிர்வாகம் தடை விதித்தது. இதற்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்நிலையில் சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் அதனை வரவேற்றுள்ளார்.

புலிப்பாணி சுவாமிகள் போகர் ஜெயந்தி விழாவிற்கு தன் வரவேற்ப்பைத் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : May 12, 2023, 5:58 PM IST

புலிப்பாணி சுவாமிகள் போகர் ஜெயந்தி விழாவிற்கு தன் வரவேற்ப்பைத் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்: பழனியில் வருகின்ற 18-ஆம் தேதி நடைபெறும் போகர் ஜெயந்தி விழாவிற்கு திருக்கோயில் நிர்வாகம் தடை விதித்தது. இதற்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதில் சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் “தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்” என தன் வரவேற்பைத் தெரிவித்துள்ளார். பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் பல ஆண்டுகளாக இந்த விழா நடைபெற்று வருகின்றது.

வருகின்ற 18ஆம் தேதி நடைபெற இருந்த போகர் ஜெயந்தி விழாவினை பழனி திருக்கோவில் நிர்வாகம் தடை விதிப்பதாக ஆணைப் பிறப்பித்து இருந்த நிலையில் புலிப்பாணி ஆசிரமம் சார்பில், மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடர்ந்து இருந்தது.

இவ்வழக்கை விசாரணை செய்த டி.ஆர்.சுவாமி நாதன் , ஸ்ரீமதி நீதிபதிகள் கொண்ட அமர்வு பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் புலிப்பாணி ஆசிரமம் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோயில் இணை ஆணையர் மே 2ஆம் தேதி தடை விதித்துள்ளனர்.

இதுசட்டத்திற்கு புறம்பானது எனவும் பழனி கோயிலில் போகர் சந்நிதியை, தொன்று தொட்டு புலிப்பாணி சுவாமிகள் முறையாக பூஜை செய்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். எனினும் கடந்த ஆண்டுகளில் போகர் ஜெயந்தி விழா அபிஷேக பூஜைகள் நடத்திய வீடியோ ஆதாரம் உள்ளது என்றும்; அதனால் போகர் ஜெயந்தி விழாவைக் கடந்த ஆண்டு போல நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும் மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவினை விசாரித்த நீதிபதிகள் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்து நீதிபதி வருகின்ற மே 18ஆம் தேதி புலிப்பாணி பாத்திர ஸ்வாமிகள் சார்பில் காலை 11 மணி முதல் நண்பகல் இரண்டு மணி வரை போகர் ஜெயந்தி விழா முறைப்படி நடத்த உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இந்நிலையில் சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் செய்தியாளர்களை இன்று காலை சந்தித்தார். அப்போது போகர் ஜெயந்தி விழா 18ஆம் தேதி நடைபெற அனுமதி அளித்து மதுரை உயர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளதையடுத்து அதற்கு தன் வரவேற்பைத் தெரிவத்துள்ளார்.

”தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தர்மமே மீண்டும் வெல்லும்” எனவும் மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவை சுட்டிக்காட்டி தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் பத்திரிகையாளர்களும் வருவாய்த்துறைக்கும் நன்றி தெரிவித்தார்.

மேலும் 17ஆம் தேதி நடைபெற இருக்கும் சிறப்பு யாகத்தில் ஜப்பான் நாட்டில் இருந்து பலர் கலந்து உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நம்ம ஊர் சூப்பர் திட்டம் - திடீர் ஆய்வுடன் தூய்மைப்பணியில் ஈடுபட்ட திருப்பத்தூர் கலெக்டர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.