ETV Bharat / state

வீடியோவால் விபரீதம்; நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்த இளைஞரை தேடும் பணி தீவிரம் - வீடியோ

நீர்வீழ்ச்சியில் நின்று வீடியோவுக்கு போஸ் கொடுத்த இளைஞர் தடுமாறி நீரில் விழுந்தார். அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

வீடியோவால் விபரீதம்; நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்த இளைஞரை தேடும் பணி தீவிரம்

author img

By

Published : Aug 4, 2022, 9:55 AM IST

திண்டுக்கல்: ஆத்தூர் தாலுகா மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது பெரும்பாறை புள்ளாவெளி நீர்வீழ்ச்சி. இந்த நீர்வீழ்ச்சிக்கு திண்டுக்கல், மதுரை, தேனி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்வதால் நீர்வீழ்ச்சியில் அதிக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பரமக்குடியை சேர்ந்த அஜய் பாண்டியன் என்பவர் தாண்டிக்குடியில் உள்ள தனியார் எஸ்டேட்டில் பணி செய்து வருவதாகவும், நேற்று விடுமுறை என்பதால் அவரது நண்பருடன் புள்ளாவெளி நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

அப்போது அஜய் பாண்டியன் ஆபத்தை உணராமல் நீர்வீழ்ச்சியின் பக்கவாட்டில் நின்று தனது நண்பரை வீடியோ எடுக்க சொல்லி போஸ் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி நூறு அடி நீர்வீழ்ச்சியில் இருந்து உருண்டு விழுந்தார். உடனடியாக அவரது நண்பர் கூச்சலிட அங்கிருந்த சுற்றுலா பயணிகள் உடனடியாக காவல்துறைக்கும், ஆத்தூர் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

வீடியோவால் விபரீதம்; நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்த இளைஞரை தேடும் பணி தீவிரம்

அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் அஜய் பாண்டியன் கிடைக்கவில்லை. அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதும் தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து தாண்டிக்குடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து இன்றும் அஜய் பாண்டியனை தேடும் பணி தொடரும் என தீயணைப்பு துறையினரும் காவல்துறையினும் தெரிவித்துள்ளனர்.

அஜய் பாண்டியன் நீர்வீழ்ச்சியில் இருந்து விழும் நேரத்தில் அவரது நண்பர் எடுத்த பதைபதைக்க வைக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதையும் படிங்க: திருமணம் செய்வதாகக்கூறி ரூ.30 லட்சம் மோசடி; துணை நடிகை மீது புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.