திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பழைய அப்பர் லேக் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவின் உரிமையாளர் விடுமுறை நாள்களில் வந்து செல்வார். இதில் தோட்ட பராமரிப்பு பணியை ஊழியர்கள் பகலில் வந்து செய்துவிட்டு மாலை சென்று விடுவார்கள்.
இந்நிலையில், டிசம்பர் 22ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் இந்த பங்களாவின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அறையினுள் விலையுயர்ந்த டிவி மற்றும் சமையல் பொருள்களை திருடி சென்றனர். பங்களாவை பராமரித்து வந்தவர் கொடுத்த புகாரின் பேரில் கொடைக்கானல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பங்களாவின் கதவை உடைத்து திருடிய நபர்களை தேடி வந்தனர்.
இதனிடையே, இன்று(டிச.25) சந்தேகத்திற்டமான நிலையில் சுற்றித் திரிந்த எம்.எம் தெருவை சேர்ந்த சுரேஸ் என்பவரை காவல் துறையினர் விசாரித்தனர். அதில், தனியார் பங்களாவின் பூட்டை உடைத்து பொருள்கள் திருடியது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: முயற்சியின் முழு உருவம் கிரன் ராஜ்புத்!