திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக தமிழ்நாடு அரசின் சட்டப்பேரவை பொது கணக்குக் குழு ஆய்வு செய்து வருகிறது. நேற்று முன்தினம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டத்தை நடத்தி, மேம்பாட்டு பணிகள் குறித்து அக்குழுவினர் கேட்டறிந்தனர்.
இதனிடையே, அக்குழுவின் தலைவரும் எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக திருச்சியில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து இந்தக் குழுவின் தலைவராக பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தற்காலிகமாகப் பொறுப்பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில், பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தலைமையிலான சட்டப்பேரவை பொது கணக்குக் குழுவானது இன்று (டிச.18) கொடைக்கானல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டது.
தொடர்ந்து, கொடைக்கானல் பேரிஜம் பகுதியில் தமிழ்நாடு பயோடைவர்சிட்டி கிரீனிங் ப்ரோக்ராம் திட்டத்தின் கீழ், 710 ஹெக்டேர் பரப்பளவில் புல் தரைகள் அமைக்கப்படும் பணியினை குழுவினர் ஆய்வு செய்தனர். பின்னர் கொடைக்கானல் சுற்றுலா வளர்ச்சி கழகக் கூட்ட அரங்கில் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது.
![கொடைக்கானலில் ஆய்வு மேற்கொண்ட சட்டப்பேரவை பொது கணக்கு குழு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-dgl-01-kodaikanal-mlasmeeting-vs-spt-tn10030_18122020185924_1812f_1608298164_556.jpg)
இந்த கூட்டத்தில் பேசிய குழுவின் தலைவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “ மாவட்ட முழுவதும் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு பணிகளை தமிழ்நாடு அரசின் சட்டப்பேரவை பொது கணக்குக் குழு ஆய்வு செய்தது. கொடைக்கானலில் நகராட்சிக்கு கூடுதல் குடிநீர் வழங்கும் திட்டத்தினை ஆய்வு செய்தது. வன உயிரின பகுதியில் மேம்பாட்டு பணிகளை இந்த குழு ஆய்வு செய்தது” என்றார்.
இந்த கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் உதயசூரியன், டி.ஆர்.பி.ராஜா, அரசுத் துறை உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க : ஆபத்தான நிலையில் உள்ள நீர்த்தேக்க தொட்டி: அச்சத்தில் பொதுமக்கள்!