திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பள்ளப்பட்டியில் இருந்து வேடசந்தூர்க்கு சுமார் 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது. இதில் ரங்கநாதபுரம் என்ற பகுதியிலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவிலான ஐயர்மடம் வரை தீப்பொறி பறந்ததை கவனிக்காமல் பேருந்து ஓட்டுநர் ஓட்டி வந்துள்ளார்.
இதில் அவ்வழியாக வந்த பிற வாகனங்கள், வாகனத்தை மறித்து தீப்பொறி பறக்கிறது என்று கூறியதின்பேரில் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியதும் பேருந்து உள்ளே இருந்த பயணிகள் பதறியடித்து ஓடினார்கள்.
பின்பு சாலையின் ஓரமாக நிறுத்தப்பட்ட தீப்பொறி பறந்த பேருந்தில் இருந்த பயணிகள் அவ்வழியாக வந்த மினி பேருந்தில் ஏற்றி அனுப்பப்பட்டனர். மினி பேருந்தில் அதிகமான பயணிகள் ஏற்றப்பட்டதால் பேருந்து படியில் தொங்கியபடி நிற்கக்கூட இடம் இல்லாததால் பயணிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் பரபரப்பானது.