தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மனைவி கண்ணாத்தாள். இவர் திண்டுக்கல் மென்டோன்சா காலனி பகுதியில் உள்ள தனது மகன் வெங்கடேசன் வீட்டில் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக வெளியில் வருவதைத் தவிர்த்து வந்த இவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதனிடையே, இன்று அவர் வயது மூப்பின் காரணமாக காலமடைந்துள்ளார். இதுகுறித்து, சென்னையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றிருந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் திண்டுக்கல் விரைந்தார்.
கண்ணாத்தாளின் உடல் மெண்டோசா காலனியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்திவருகின்றனர். இவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: தகுந்த இடைவெளி இல்லாமல் நடக்கும் அமைச்சரின் நிகழ்ச்சி