திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்திஜி கலையரங்கத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கீம் தலைமையில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அவர், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் பாதிப்புகள் குறித்து விளக்கி பேசி அந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்றனர்.
அதனையடுத்து பேசிய மாநில பொதுச் செயலாளர் முகமது கூறுகையில், ”சென்னை புதிய வண்ணாரப்பேட்டையில் ஜனநாயக வழியில் முஸ்லீம்கள் அமைதியாக நடத்திய போராட்டத்தை தமிழ்நாடு காவல் துறையினர் தடியடி நடத்தி கலைத்துள்ளனர். இதனால் வயதானவர்கள், பெண்கள் என பலரும் காயமடைந்தனர். இந்த அதிர்ச்சியில் ஒருவர் இறந்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்தமாட்டோம் என தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதுமட்டுமின்றி தடியடி நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்” என்றார்.
இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் ஏராளமான இஸ்லாமியர்கள், திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளை சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: எழுவர் விடுதலை தொடர்பில் ஆளுநருக்கு முதல்வர் அழுத்தம் கொடுப்பார் - அற்புதம்மாள் நம்பிக்கை!