தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் தாக்கமானது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திலும் கரோனா தொற்றின் பாதிப்பானது பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இதில் காவல்துறையினரும், அரசு அதிகாரிகளும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கரோனா சிகிச்சை பெற்று வந்த பெண் ஆய்வாளர் உள்பட பத்து காவலர்கள் பூரண குணமடைந்து நேற்று (ஆக.10) பணிக்கு திரும்பினார்கள்.
இவர்களை வரவேற்கும் விதமாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் சக காவலர்கள் கரோனாவில் இருந்து மீண்டு வந்த காவல்துறையினரை மலர்தூவி வரவேற்றனர்.
இதைத்தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா பழங்கள் உள்ளிட்ட சத்தான பொருள்கள் வழங்கி அவர்களை வரவேற்றார்.
இதையும் படிங்க: மீண்டும் பணிக்கு திரும்பிய கோவை ஆட்சியர்!