ETV Bharat / state

கொடைக்கானல் அருகே 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த ஜீப்: மாணவர் பலி - கொடைக்கானல் விபத்து

திண்டுக்கல் : கொடைக்கானல் அருகே உள்ள புலியூர் கிராமத்திற்கு சென்ற ஜீப், 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து கிஷோர் என்ற மாணவர் உயிரிழந்தார். மேலும் நான்கு மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

ஜீப் கவிழ்ந்து மாணவன் உயிரிழப்பு
ஜீப் கவிழ்ந்து மாணவன் உயிரிழப்பு
author img

By

Published : Mar 31, 2021, 2:05 PM IST

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள நாயுடுபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் தனது நண்பர்களான கார்த்திக் (25), நிஷாந்த் (18), செந்துரப்பாண்டி (14), ராகுல் (18) ஆகியோருடன் வில்பட்டி கிராமம் புலியூர் பகுதிக்கு அவர் சென்றுள்ளார். அப்போது ஜீப் ஒரு வளைவில் திரும்பும்போது நிலை தடுமாறி சுமார் 100 அடிப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே மாணவர் கிஷோர் உயிரிழந்தார்.

உடன் வந்த நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து, சம்பவம் குறித்து அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில், சம்பவ இடத்திலிருந்து நால்வரும் மீட்கப்பட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர்.

அங்கு காயம்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டனர்.

இதையும் படிங்க: உறுப்புதான விழிப்புணர்வின் விதை- டிஜிபி சுனில் குமார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.