ETV Bharat / state

பழனியில் ரூ.47 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மனநல காப்பகம்; எப்போது திறக்கப்படும்? - பழனி கோயில்

பழனியில் பல வருடங்களாக திறக்கப்படாமல் உள்ள மனநல காப்பகத்தை உடனடியாக திறக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

47 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மனநல காப்பகம்: திறக்கப்படும் ?

author img

By

Published : Jul 5, 2023, 10:36 PM IST

47 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மனநல காப்பகம்: திறக்கப்படும் ?

திண்டுக்கல்: பழனியில் அமைந்துள்ள மனநல காப்பகத்தை அமைச்சர் தேதி கொடுத்தால் தான் திறக்க முடியும் என கூறி வருடக்கணக்கில் திறக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில், காப்பகத்தை உடனே திறக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக் கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த கோயிலில் ஒரு சிலர் தங்கள் வீட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கோயிலுக்கு அழைத்து வருவது போல் அழைத்து வந்து, இங்கேயே விட்டு விட்டு சென்று விடுகிற சம்பவம் வழக்கமாகிவிட்டது.

இதில் பெரும்பாலான மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் அடிவாரம், கிரிவல பாதை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வீடின்றியும், தங்க இடம் இல்லாமலும், மழை காலங்களில் மிகுந்த சிரமத்துடன் சுற்றித் திரிகின்றனர். இதில் சில பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சூழல் ஏற்படுகிறது.

இதையும் படிங்க: மேட்டூர் கொலை வழக்கு: குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பிறப்பித்த ஆணையை ரத்து செய்த உயர்நீதிமன்றம்!

இதனால், பழனியில் மனநலக் காப்பகம் அமைக்க வேண்டும் என நீண்ட ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பழனியில் மாணவர்கள் விடுதியாக செயல்பட்டு வந்து பராமரிப்பு இன்றி இருந்த பழனி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ராமகிருஷ்ணா விடுதியை 47 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு மனநல காப்பகமாக அமைக்கப்பட்டது.

அந்த காப்பகமானது தற்போது பணிகள் முடிந்தும் திறக்கப்படாமல் வருட கணக்கில் கிடப்பில் இருக்கிறது. இந்நிலையில் தற்போது பழனி கோயிலில் பக்தர்கள் சீசன் இல்லாத சூழலில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உணவிற்கு வழி இல்லாமல் சுற்றித் திரிகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு உரிமைச் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பகத்சிங் கூறுகையில், “இது குறித்து கோயில் அதிகாரிகளிடம் கேட்டபோது அமைச்சர் செய்தி கொடுத்தால் தான் காப்பகத்தை திறக்க முடியும் என கூறுகிறார்கள்” என குற்றம் சாட்டினார். இதனால் உடனடியாக அரசு தலையிட்டு மனநல காப்பகத்தை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: மயிலாடுதுறை மதிமுக மாவட்டச்செயலர் பதவிநீக்கம்: மதிமுக துணைபொதுச்செயலர் கூறிய பரபரப்பு தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.