ETV Bharat / state

பாலியல் புகார் - தனியார் கல்லூரி தாளாளர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம் - தனியார் கல்லூரி தாளாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திண்டுக்கல் அருகே உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், அக்கல்லூரியின் தாளாளரை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

dindigul
dindigul
author img

By

Published : Apr 10, 2022, 6:36 AM IST

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே உள்ள தனியார் செவிலியர் பயிற்சி கல்லூரி தாளாளர் பி.ஜோதிமுருகன் மீது, அங்கு படித்த மாணவிகள் பாலியல் புகார் அளித்தனர். இதுதொடர்பாக தாடிக்கொம்பு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நீதிமன்றத்தில் கடந்த நவம்பர் 23ஆம் தேதி, ஜோதிமுருகன் சரணடைந்தார்.

டிசம்பரில் பிணை: தொடர்ந்து, நவம்பர் 29ஆம் தேதி திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜோதிமுருகன், பழனி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், ஜோதிமுருகன் தரப்பில் பிணை வழங்க கோரி திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டதை அடுத்து, டிசம்பர் 5ஆம் தேதி அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

மார்ச்சில் பிணை ரத்து: அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் அரசுத் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் தங்களையும் சேர்த்து விசாரிக்க கோரி மாதர் சங்கத்தினர் சார்பிலும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, ஜோதிமுருகனுக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்து, கடந்த மார்ச் 22ஆம் தேதி உத்தரவிட்டது.

மகிளா நீதிமன்றத்தில் சரண்: உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஜோதிமுருகன் தரப்பில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிப்படுத்தி, கடந்த சனிக்கிழமை (ஏப். 2) உத்தரவிட்டது. மேலும், நீதிமன்றம் நிபந்தனை விதித்ததன்படி, திண்டுக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஜோதிமுருகன் நேற்று முன்தினம் (ஏப். 8) சரணடைந்தார்.

குண்டாஸில் கைது: உச்சநீதிமன்ற உத்தரவின்படி நீதிமன்றத்தில் சரணடைந்த அவரை ஏப்ரல் 22ஆம் தேதிவரை, திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் ஜோதிமுருகனை அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர். இந்நிலையில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் பரிந்துரையின் பேரில், ஜோதிமுருகனை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மாநில தேர்தல் ஆணையம், உள்துறைச் செயலாளர், டிஜிபி-க்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.