திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமார். இவர் கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான தாண்டிக்குடி, கேசிபட்டி பண்ணைக்காடு, மங்கலம்கொம்பு, பாச்சலூர், குப்பமாள்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
செண்டை மேளம், தப்பாட்டம் என கலை நிகழ்ச்சிகளுடன் இவர் சென்ற பகுதிகள் எல்லாம் களைகட்டியது. ஆரத்தி எடுத்து கும்ப மரியாதையுடன் அப்பகுதி பெண்கள் இவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அத்தோடு இல்லாமல் ஒரு படி மேலை சென்று தப்பாட்டத்திற்கு குத்தாட்டம் போட்டனர்.
பள்ளி மாணவிகள், பருவ பெண்கள் , பாட்டிகள் என வயது வித்தியாசமின்றி அவர்கள் போட்ட ஆட்டத்திற்கு அப்பகுதி ஆண்கள் விசில் சத்தத்தை தெறிக்க விட்டனர். வேட்பாளர் செந்தில்குமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது பூசாரி ஒருவருக்கு திடீரென அருள் வந்தது.
உணர்ச்சியின் உச்சத்திற்கே சென்ற அவர் வேட்பாளரின் தலைக்கு திருநீறு அடித்தார். மேலும் வெற்றி உனக்கு தான் என்றும் அருள்வாக்கு சொன்னார். உடனே வேட்பாளர் பூசாரியின் காலில் சாஷ்டாங்கமாக காலில் விழுந்து ஆசி பெற்று சென்றார்.