திண்டுக்கல்: நாளை (டிச.17) மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான பேரறிஞர் அண்ணா பூ வணிக வளாகம் உள்ளது.
இந்த சந்தையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சுற்றியுள்ள ஏ.வெள்ளோடு, நரசிங்கபுரம், கல்லுப்பட்டி, பில்லமநாயக்கன்பட்டி, தாடிக்கொம்பு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சாகுபடி செய்யப்படும் பூக்களை விவசாயிகள் விற்பனைக்காகக் கொண்டு வருவது வழக்கம்.
இந்த சந்தையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்குத் தினம் தோறும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் பனிப்பொழிவு அதிக அளவில் காணப்படுவதால் பூக்களின் விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது.
இதையும் படிங்க: ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி: பகல் பத்து ஐந்தாம் நாள் உற்சவத்தில் ஜொலித்த ரெங்கநாதர்!
இந்நிலையில் நாளை (டிச.17) மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு பூக்களின் விலை பன்மடங்கு உயர்ந்து காணப்படுகிறது. அதன்படி
பூக்களின் விலை:
- மல்லிகைப்பூ 1 கிலோ - ரூ.2500
- முல்லை பூ 1 கிலோ - ரூ.1000
- காக்கரட்டான் - ரூ.700
- ஜாதி பூ - ரூ.600
- பன்னீர் ரோஸ் - ரூ.200
- பட்டன் ரோஸ் - ரூ.170
- சம்பங்கி - ரூ.180
- செவ்வந்திப் பூ - ரூ.160
- செண்டுமல்லி - ரூ.80
- கோழி கொண்டை - ரூ.70
என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பூக்களின் விலை ஏற்றம் ஒரு புறம் வியாபாரிகள் மகிழ்ச்சியிலிருந்தாலும் மறுபுறம் பனிப்பொழிவு காரணமாகப் பூக்களின் விளைச்சல் சரியாக இல்லை என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: திரேஸ்புரம் துறைமுகத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்.. மீனவர்கள் மகிழ்ச்சி!