ETV Bharat / state

மதநல்லிணக்கத்திற்கு மற்றுமொரு சான்று: திரளானோர் கலந்து கொண்ட திருவிழா - மெகா அன்னதான திருவிழா

திண்டுக்கல்: 300 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவில் சாதிமத பேதமின்றி அனைத்து மக்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

சாதிமத பேதமில்லா மெகா அன்னதான திருவிழா
author img

By

Published : Aug 7, 2019, 5:09 AM IST

Updated : Aug 7, 2019, 5:15 AM IST

திண்டுக்கல் மாவட்டம், மலைக்கோட்டை பின்புறம் அமைந்துள்ளது முத்தழகுபட்டி. இங்குள்ள புனித செபஸ்தியார் ஆலய திருவிழா ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் நடைபெறும். இந்த ஆலயத் திருவிழா கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான அன்னதானத் திருவிழா இன்று தொடங்கியது. இவ்விழாவிற்காக மக்கள் நேர்த்திக்கடனுக்காக கொடுத்த 1300 ஆடுகள்,1300 சேவல்கள், 750 கிலோ அரிசி, 2டன் காய்கறிகள் கொண்டு உணவு சமைக்கப்பட்டு மக்களுக்கு விடிய விடிய அன்னதானம் வழங்கப்பட்டது.

சாதிமத பேதமில்லா நடைபெற்ற புனித செபஸ்தியார் திருவிழா

இந்த விழாவில் சாதி மத பேதமின்றி தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்கள் கலந்து கொண்டனர். இதில் பலி கொடுக்கப்படும் இறைச்சிகள் இஸ்லாமிய முறைப்படி ஹலால் செய்யப்பட்டு அதன்பின் சமைக்கப்படும். மேலும், இவ்விழாவில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரும் ஒன்று சேர்ந்து பங்கேற்பது குறிப்படத்தக்கது. சுமார், 300 ஆண்டுகளாக நடைபெறும் இத்திருவிழா தமிழ்நாட்டில் பேணப்படும் மதநல்லிணக்கத்திற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

Intro:திண்டுக்கல் 06.08.2019

300 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவில் சாதிமத பேதமின்றி சமத்துவ திருவிழா.

Body:திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறம் அமைந்துள்ளது முத்தழகுபட்டி. இங்குள்ள புனித செபஸ்தியார் ஆலய திருவிழா ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் நடைபெறும். இதனை முன்னிட்டு கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவின் முக்கிய விழாவான மெகா அன்னதான உணவு திருவிழா இன்று தொடங்கியது. இதற்காக பக்தர்கள் நேர்த்திக்கடனுககாக கொடுத்த 1300 ஆடுகள்,1300 சேவல்கள். 750 கிலோ அரிசி,2 டன் காய்கறிகள் கொண்டு உணவு சமைக்கப்பட்டு பக்தர்களுக்கு விடிய விடிய அன்னதானம் நடைபெற்றது.

இதில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் சாதிமத பேதமின்றியும் காணிக்கையாக ஆடு,சேவல்கள் வழங்கியும் மெகா அன்னதானத்தில் கலந்து கொண்டனர். இதில் பலி கொடுக்கப்படும் இறைச்சிகள் இசுலாமிய மோதினார் மூலம் ஹலால் செய்யப்பட்டு அதன்பின் சமைக்கப்பட்டது. இவ்விழாவில் இந்து மதத்தினர் மற்றும் கிறிஸ்துவர்கள் ஒன்றிணைந்து அன்னதான விழாவில் பங்கேற்பது குறிப்படத்தக்கது.
Conclusion:
Last Updated : Aug 7, 2019, 5:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.