திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு நாசா விண்வெளி மையத்தின் மூத்த விஞ்ஞானி கோவையைச் சேர்ந்த கோபால்சாமி சென்றிருந்தார். அப்போது, அரசு மேல்நிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுடன் விஞ்ஞானி கோபால்சாமி கலந்துரையாடினார்.
அப்போது சூரியப்புள்ளிகள், சூரிய கதிர்களின் பலன்கள், வான்வெளி, காற்று மண்டலம் உள்ளிட்ட பல்வேறு வான் இயற்பியல் குறித்து மாணவ, மாணவிகள் எழுப்பிய கேள்விகளுக்கு கோபால்சாமி விளக்கமளித்தார்.
முன்னதாக, மாணவர்களிடையே உத்வேகம் அளிக்கக் கூடிய வகையிலும் தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும் பேசியது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகளை கவர்ந்தது. இந்நிகழ்வில் வான் இயற்பியல் ஆராய்ச்சி மைய கொடைக்கானல் விஞ்ஞானி எபினேசர், அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: பள்ளி பரிமாற்றத் திட்டத்தில் மாணவர்கள் சுற்றுப்பயணம்