கரோனா பரவல் காரணமாக தமிழ்நாடு அரசு சுற்றுலா இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்துள்ளது. இந்நிலையில் முக்கிய சுற்றுலா இடமாக இருக்கும் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளை நம்பி மட்டுமே மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை நடத்திவருகின்றனர். இ-பாஸ் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டுமென கொடைக்கானலில் வியாபாரிகள் போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டுமென கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு பயிலும் டெனிட்ட மகேந்திரன், அவர் தந்தை மகேந்திரன் ஆகிய இருவரும் கொடைக்கானல் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக டெனிட்ட மகேந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.