ETV Bharat / state

கொடைக்கானல் நீர் வீழ்ச்சியில் தவறி விழுந்து பள்ளி மாணவன் உயிரிழப்பு - kodaikanal water falls

கொடைக்கானல் ஐந்து வீடு நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

கொடைக்கானல் நீர் வீழ்ச்சியில் தவறி விழுந்து பள்ளி மாணவன் உயிரிழப்பு

author img

By

Published : Oct 6, 2022, 11:08 AM IST

திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை பகுதியில் ஐந்து வீடு நீர்வீழ்ச்சி உள்ளது. இந்நிலையில், நாயுடுபுரம் சேரன்நகரை சேர்ந்த பிரின்ஸ்(17) என்பவரும் அவரது நண்பர்களும் ஐந்து வீடு நீர்வீழ்ச்சிக்கு சென்று உள்ளனர். ஆபத்தை உணராத நண்பர்கள் நீர்வீழ்ச்சியின் ஓரமான பகுதிக்கு சென்றுள்ளனர்.

அப்போது பிரின்ஸ் எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார். அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அப்பகுதி மக்கள் உதவியுடன் வீழ்ச்சியில் சிக்கிய பிரின்ஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஐந்து வீடு நீர்வீழ்ச்சி பகுதியை பாதுகாப்பு வேலிகள் கொண்டு மூட வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர் . ஆபத்தை உணராமல் இளைஞர்கள் அப்பகுதியில் சென்று உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் காட்டுயானைகள் வருகை - சுற்றுலாப்பயணிகள் பார்வையிட அனுமதி மறுப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.