திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மிடப்பாடியில் கோயில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற விழாவில் மேளம் வாசித்து விட்டு ஞானகுமார், ஹரிதாஸ் ஆகிய இருவரும் அதிகாலை தங்களது பைக்கில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது மதுரையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த கார் ஒன்று தாளையம் அவர்கள் பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஞானகுமார், ஹரிதாஸ் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இவ்விபத்தினைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சாமிநாதபுரம் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற சாமிநாதபுரம் காவல்துறையினர் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்கு பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், கார் ஓட்டுநர் ரவி பிரசாத் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.