திண்டுக்கல்: தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கி வரும் நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மலைகிராம மக்களுக்கு அந்நிவாரணம் முழுமையாக சென்றடையாமல் இருந்தது.
இந்நிலையில், 50 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கிராமங்களான வெள்ளகெவி, சின்னூர், கடப்பாறை குழி ஆகிய மலைகிராம மக்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட 50 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை நக்சல் தடுப்பு காவலர்கள் உதவியுடன் கொடைக்கானல் வருவாய் கோட்டாசியர் சிவக்குமார் அப்பகுதி மக்களுக்கு வழங்கினார்.
மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி நிவாரணப் பொருள்களை வாங்கிச் சென்றனர். இந்நிகழ்ச்சியில் நக்சல் தடுப்பு சார்பு ஆய்வாளர் முருகேசன், காவலர்கள் ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.