ETV Bharat / state

நோயாளிகள் பயன்படுத்த மெத்தை, தலையணை வழங்கிய செஞ்சிலுவைச் சங்கம்! - செஞ்சிலுவைச் சங்கம் நூற்றாண்டு விழா

திண்டுக்கல்: கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் பயன்படுத்துவதற்குத் தேவையான மெத்தை, தலையணை போன்றவற்றை இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தினர் வழங்கினர்.

KODAIKANAL GOVERNMENTHOSPITAL REDCROSS  கொடைக்கானல் செஞ்சிலுவைச் சங்கம்  கொடைக்கானல் செய்திகள்  செஞ்சிலுவைச் சங்கம் நூற்றாண்டு விழா  red cross hudred years celebrated in kodaikanal govt hospital
கோடைக்கானல் அரசு மருத்துவமனைக்க நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
author img

By

Published : Feb 22, 2020, 1:01 PM IST

இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழ்நாட்டில் செஞ்சிலுவைச் சங்கத்தினர் பல்வேறு சமூக நலப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்குத் தேவைப்படும் அன்றாட உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். இவ்விழாவை இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் கொடைக்கானல் கிளைத் தலைவர் சூரியன் ஆபிரகாம் ஒருங்கிணைத்தார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், நோயாளிகள் பயன்படுத்தத் தேவையான மெத்தை, தலையணை, கம்பளி உள்ளிட்ட பொருள்கள் மருத்துவமனை தலைமை மருத்துவரிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சூரியன் ஆபிரகாம் இணைந்து வழங்கினர்.

கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கப்பட்டது. இதன்பின்னர், சர்வதேச அளவில் கால்பந்தாட்டப் போட்டிக்குத் தேர்வாகிய மாணவனுக்கு செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில் நிதியுதவி செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 'தாட்கோ மூலம் குறைந்த வட்டியில் கல்விக்கடன் பெற விண்ணப்பிக்கலாம்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.