திண்டுக்கல்: கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வௌவால் கடித்த ரம்பூட்டான் பழத்தை சாப்பிட்டதால் சிறுவன் உயிரிழந்தார். அவரது பெற்றோருக்கும் நிபா வைரஸ் அறிகுறி உள்ளது. இதையடுத்து கேரளாவில் ரம்பூட்டான் பழங்கள் சாப்பிட அந்த மாநில சுகாதாரத் துறை தடை விதித்துள்ளது.
கேரளாவில் தடை விதிக்கப்பட்ட காரணத்தால் கொடைக்கானலில் ரம்பூட்டான் பழத்தை வாங்குவதற்கு சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் அச்சப்படுகின்றனர். இதனால் கொடைக்கானலில் ரம்புட்டான் பழங்கள் தேக்கமடைந்தள்ளன.
வழக்கமாக 250 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த பழம் 100 முதல் 150 ரூபாய்க்கு கூட வாங்க ஆளில்லாமல் இருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
தமிழ்நாடு அரசு இந்த பழங்களை ஆய்வுசெய்து விற்பனை செய்வதற்கு அனுமதிக்க கோரி பழ வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மீண்டும் நிபா: உறுதி செய்தது கேரள அரசு; தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!