ETV Bharat / state

குடகனாறு ஆற்றில் தண்ணீர் திறந்து விடக்கோரி மக்கள் சாலை மறியல் - தடியடி நடத்திய போலீசார் - dindigul district news

திண்டுக்கல் : குடகனாறு ஆற்றில் தண்ணீர் திறந்துவிடக்கோரி 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டதை அடுத்து, காவல் துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

குடகனாறு ஆற்றில் தண்ணீர் திறந்து விடக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

author img

By

Published : Oct 27, 2020, 6:39 PM IST

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள காமராஜர் நீர்த்தேக்கம் வழியாக குடகனாறு பாய்கிறது. இந்த ஆறு, ஆத்தூர் தாலுகா, மல்லையபுரம், வீரக்கல், அனுமந்தராயன்கோட்டை, மயிலாப்பூர், பாராட்டி, பொன்மாந்துறை உள்ளிட்ட கிராமங்கள் வழியாக சென்று காவிரியில் கலக்கிறது. இப்பகுதியில் உள்ள பொதுமக்களும் விவசாயிகளும் குடிநீருக்கும் விவசாயத்திற்கும் பல வருடங்களாக குடகனாறு ஆற்றை மட்டுமே நம்பியுள்ளனர்.

இந்நிலையில் 110 கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்லும் இந்த ஆற்றின் மேல்பகுதியில் ராஜ வாய்க்கால் என்ற இடத்தில் தடுப்பு அணை கட்டப்பட்டதால், எட்டு வருடங்களாக குடகனாறு ஆற்றில் தண்ணீர் திறந்துவிடவில்லை. இதனால் இந்த ஆற்றை நம்பியிருந்த பொதுமக்களும் விவசாயிகளும் குடிநீருக்கும் விவசாயத்திற்காகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாக இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

சாலை மறியல், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றிப் ஆர்ப்பாட்டம், உள்ளாட்சித் தேர்தல் புறக்கணிப்பு என பல்வேறு வகையான போராட்டங்களை இவர்கள் நடத்திய நிலையில், மாவட்ட நிர்வாகத்தால் கடந்த மாதம் பத்து நாள்களுக்கு மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டு, மீண்டும் அடைக்கப்பட்டது.

இதனால் இப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் மீண்டும் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று (அக்.27), திண்டுக்கல், வத்தலகுண்டு சாலையில் பித்தளைப்பட்டி பிரிவு அருகே பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் சரக டிஐஜி முத்துச்சாமி ஐபிஎஸ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா இருவரும் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு, பொதுப்பணித்துறை அலுவலர்கள், குடகனாறு நிபுணர் குழுவை சார்ந்த அலுவலர்கள் ஆகியோரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லாததால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தி கலைந்து செல்ல வைத்தனர். தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்கள் தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்‌.

இதையும் படிங்க: திருமாவளவனின் உருவ பொம்மை எரிப்பு: பாஜகவினர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.