ETV Bharat / state

தமிழ்நாடு முழுவதும் வெப்பச்சலனம் காரணமாக பரவலாக மழை!

தமிழ்நாடு முழுவதும் வெப்பச்சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருவதால், பொது மக்கள் வீட்டை விட்டு வெளிவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

rain_
rain_
author img

By

Published : Nov 28, 2019, 1:35 PM IST

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌லில் காலை முத‌ல் காற்றுட‌ன் கூடிய‌ ப‌ல‌த்த‌ சார‌ல் ம‌ழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஏரிச்சாலை, அப்ச‌ர்வேட்ட‌ரி, நாயுடுபுர‌ம், செண்பகனூர், பாம்பார்புரம், பேருந்து நிலையப் பகுதி, நாயுடுபுர‌ம், செண்ப‌க‌னூர், சீனிவாச‌புர‌ம், அண்ணாந‌க‌ர் , மேல்மலை, கீழ்மலைக்கிராமங்கள் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் மழை பெய்து வ‌ருகிற‌து.

திண்டுக்கல்லில் பெய்த மழை

இதனால், பொதும‌க்க‌ள் வீட்டை விட்டு வெளி வ‌ர முடியாத‌ நிலை இருந்து வருகிற‌து. இதனிடையே மாவட்ட நிர்வாகம் பள்ளி விடுமுறை அறிவிப்பு வெளியிடாததால் ப‌ள்ளிக‌ளுக்குச் செல்லும் மாண‌வ‌, மாண‌விக‌ள் மழையில் நனைந்துவாறு பள்ளிக்குச் சென்றனர்.

இதேபோல், நாமக்கல் மாவட்டத்தில் அதிகாலை நான்கு மணி முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. நாமக்கல், பரமத்தி, திருச்செங்கோடு, இராசிபுரம் ஆகியப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பள்ளி மாணவ மாணவிகள், அலுவலகம் செல்வோர் மழையில் நனைந்தபடியே தங்கள் இடங்களுக்குச் சென்றனர்.

நாமக்கல்லில் பெய்த மழை

மேலும், சாலையில் மழை நீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்தபடி செல்லும் நிலை ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதையும் படிங்க:

டெல்லி முதல் சென்னைப் பயணம், திடீா் இயந்திரக் கோளாறு, 112 பேரின் உயிர்' - சமயோசிதமாக தரையிறக்கிய விமானி

Intro:திண்டுக்கல் 28.11.2019

கொடைக்கானல் ந‌க‌ர் ம‌ற்றும் கிராம‌ ப‌குதிக‌ளில் அதிகாலை முத‌ல் காற்றுட‌ன் கூடிய‌ ப‌ல‌த்த‌ சார‌ல் ம‌ழை பெய்து வ‌ருகிறது.

Body:திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌லில் க‌ட‌ந்த‌ சில‌ நாட்க‌ளாக‌ மேக‌ மூட்ட‌மும் அவ்வ‌போது மித‌மான‌ ம‌ழையும் பெய்து வ‌ந்தது. தொட‌ர்ந்து காலை  முத‌ல் காற்றுட‌ன் கூடிய‌ ப‌ல‌த்த‌ சார‌ல்ம‌ழை ஏரிச்சாலை, அப்ச‌ர்வேட்ட‌ரி, நாயுடுபுர‌ம், செண்பகனூர் ,பாம்பார்புரம், பேருந்துநிலையப்பகுதி , நாயுடுபுர‌ம் , செண்ப‌க‌னூர், சீனிவாச‌புர‌ம், அண்ணாந‌க‌ர் , உள்ளிட்ட‌ ப‌ல்வேறு இட‌ங்க‌ளிலும் மற்றும் மேல்மலை, கீழ்மலைக்கிராமங்களில் ம‌ழை பெய்து வ‌ருகிற‌து.

மேலும் சில‌ ப‌குதிக‌ளில் மித‌மான‌ ம‌ழையும் பெய்து வ‌ருகிறது. அதிகாலை முத‌ல் சாரல் ம‌ழை பெய்து வ‌ருவ‌தால் பொதும‌க்க‌ள் வீட்டை விட்டு வெளி வ‌ர முடியாத‌ நிலை இருந்து வருகிற‌து. இதனிடையே மாவட்ட நிர்வாகம் பள்ளி விடுமுறை அறிவிப்பு வெளியிடாததால் ப‌ள்ளிக‌ளுக்கு செல்லும் மாண‌வ‌ மாண‌விக‌ள் மழையில் நனைந்துவாறு பள்ளிக்கு சென்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.