திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த ஒரு வார காலமாகவே அவ்வப்போது கனமழையும் சாரல் மழையும் தொடர்ந்து பெய்துகொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதுமே பலத்த மழை கொட்டி தீர்த்தது.
இதன் காரணமாக கொடைக்கானல் மலைக் கிராமங்கள் ஆக இருக்கக்கூடிய பண்ணைக்காடு, தாண்டிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழையால் பிரதான சாலையில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதன் காரணமாக வத்தலகுண்டுவில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் பட்டிலங்காட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு அங்கிருந்து திருப்பி அனுப்பப்படுகிறது. மேலும் போக்குவரத்து சீர்செய்வதற்கு நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: நெல்லை அருகே சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடி வெட்டி கொலை!