புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் குளிர் காலக் கூட்டத்தொடர் இன்று காலை வழக்கம்போல் கூடியது. மக்களவையில் இன்று கேள்வி நேரம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் அறிக்கைகள், துறை சார்ந்த அறிக்கைகளை அமைச்சர்கள் தாக்கல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை அமல்படுத்துவதற்கான அரசியலமைப்பு (129வது திருத்தம்) சட்டத்தை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் அறிமுகம் செய்தார்.